»   »  10 வருடங்களுக்குப்பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா.. ரசிகர்கள் உற்சாகம்

10 வருடங்களுக்குப்பின் சூர்யாவுடன் இணையும் ஜோதிகா.. ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி ஜோதிகாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் தான் நடிக்கப் போவதாக, நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் சூர்யா-ஜோதிகாவிற்கு ஒரு தனியிடம் உண்டு.

பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

36 வயதினிலே

36 வயதினிலே

சூர்யாவைத் திருமணம் செய்துகொண்ட பின் ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப்பின் கடந்தாண்டு 36 வயதினிலே படத்தில் ஜோதிகா நடித்தார்.ஜோதிகாவின் ரீஎன்ட்ரி படமாக அமைந்த 36 வயதினிலே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதனால் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஜோதிகா முடிவு செய்திருக்கிறார்.

நட்சத்திரக் கிரிக்கெட்

நட்சத்திரக் கிரிக்கெட்

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில், ஜோதிகாவுடன் இணைந்து தான் மீண்டும் நடிக்கப் போவதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.

குற்றம் கடிதல்

குற்றம் கடிதல்

ஜோதிகா தற்போது குற்றம் கடிதல் பிரம்மாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனால் சூர்யாவும் அப்படத்தில் இணைந்து நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிரம்மா ''ஜோதிகாவை நடிக்க வைப்பது என்னுடைய திட்டமாக உள்ளது. ஆனால் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை'' என்று கூறுகிறார். குற்றம் கடிதல் படத்தின் கதை விவாதங்களில் சூர்யா அடிக்கடி கலந்து கொள்வதால் இப்படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதிய படத்தில்

புதிய படத்தில்

இருவரும் சேர்ந்து நடிக்கும் வகையிலான கதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வருகின்ற மே மாதத்திற்குள் ஒரு புதிய கதையை இருவரும் தேர்வு செய்து நடிக்கலாம் என்று சூர்யாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். படம் உறுதியாகவில்லை எனினும் சூர்யா-ஜோதிகா சேர்ந்து நடிப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கடைசியாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

English summary
Suriya Reunite with Jyotika after 10 Years. The Official Announcement will be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil