»   »  சூர்யாவின் ‘24’ ஏப்ரல் 8ல் ஆரம்பம்

சூர்யாவின் ‘24’ ஏப்ரல் 8ல் ஆரம்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிக்கும் ‘24' திரைப்படம் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை மனம் பட இயக்குநர் விக்ரம் குமார் இயக்குகிறார்.

வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைக்கும் மாஸ் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து 'மனம்' விக்ரம் குமார் இயக்கவிருக்கும் '24' படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம்.

ஏ.ஆர் ரஹ்மான் இசை

ஏ.ஆர் ரஹ்மான் இசை

'24' படத்துக்கு ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

மும்பையில் படம்

மும்பையில் படம்

இப்படத்தின் கதை மும்பையில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மும்பையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஏப்ரல் 8 முதல்

ஏப்ரல் 8 முதல்

தொடர்ச்சியாக ஒரு மாதம் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. சூர்யாவுடன் சத்யன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சொந்த தயாரிப்பு

சொந்த தயாரிப்பு

'24' படத்தை சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி மூலமாக தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Surya’s next film name titled 24 from April 8th Samantha will be playing the female lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil