»   »  ஆகஸ்டில் சூர்யாவின் அஞ்சான்?

ஆகஸ்டில் சூர்யாவின் அஞ்சான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா - சமந்தா நடிக்க, லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் படத்தை ஆகஸ்டிலேயே வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் தீபாவளி ஸ்பெஷலாக இந்தப் படம் இருக்கும் எனக் கூறி வந்தனர்.

யுவன் இசை

யுவன் இசை

இந்தப் படத்தில் நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

முதல் ஷெட்யூல்

முதல் ஷெட்யூல்

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. அடுத்தகட்டமாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்த்திரை காணாத பல இடங்களிலும் படமாக்க உள்ளனர். தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் முழு படத்தின் படப்பிடிப்பை நடத்தத் முடிவு செய்துள்ளனர்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

இப்படத்தில் இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா குத்துப்பாடல் ஒன்றுக்கு சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார். இப்படத்திற்காக ரெட் டிராகன் என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக ரெட் டிராகன் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Surya and director Lingusamy is planning to bring Anjaan for August 15.
Please Wait while comments are loading...