சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி வெற்றிக் கூட்டணியில் தற்பொழுது உருவாகிக் கொண்டிருந்த அருவா திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக அருவா திரைப்படம் முழு வீச்சில் அதன் படப்பிடிப்புகள் நடைபெற இருந்தது.

சமீபகாலமாக சூர்யாவின் திரைப்படங்கள் சுமாரான வெற்றியையும், தோல்வியையும் மட்டுமே தழுவிக் கொண்டிருந்த நிலையில் சூர்யா, ஹரி வெற்றிக் கூட்டணியில் அருவா திரைப்படம் ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி இயக்குனர்கள்

முன்னணி இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து பல்வேறு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் மிகச்சிறந்த நாயகனாகவும் இருந்து வரும் சூர்யா, தற்பொழுது தமிழில் பல்வேறு முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அசுரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவுடன் முதல் முறையாக இணையும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருந்தது.

சூர்யா-ஹரி கூட்டணியில்

சூர்யா-ஹரி கூட்டணியில்

சூர்யா வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் அருவா திரைப்படத்தில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான நிலையில், இதன் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா-ஹரி கூட்டணியில் மற்றொரு வெற்றி திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

படப்பிடிப்புகள் தொடங்கும்

படப்பிடிப்புகள் தொடங்கும்

ஆனால் அந்த காத்திருப்பிற்கு வேட்டு வைத்தது போன்று அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது, பொது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அருவா திரைப்படத்தின் படப்பிடிப்பும் கொரானா நோய்த்தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் இந்த கொரானா லாக்டவுன் முடிந்த பிறகு அருவா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என அப்படக்குழு தெரிவித்திருந்தது.

சூர்யாவின் ரசிகர்கள்

சூர்யாவின் ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி அருவா திரைப்படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இவ்வாறு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அருவா திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர்.

விரைவில் நற்செய்திகாக

விரைவில் நற்செய்திகாக

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அருவா திரைப்படத்தின் படிப்பில் கலந்து கொள்வார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்திலும், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்திலும் சூர்யா அடுத்தடுத்து நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது, எனினும் அருவா முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது என்ற செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் விரைவில் நற்செய்திகாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X