தியேட்டர்ல இருந்து ஒரே நாள்ல தூக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன்... என்ன காரணம்?

ஐதராபாத் : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் நேற்றைய தினம் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும் ரிலீசானது.

இந்த படம் வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

படம் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசான படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீசான சூர்யாவின் படமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஒரே நாளில் ரூ.7 கோடி வசூல்

ஒரே நாளில் ரூ.7 கோடி வசூல்

இந்தப் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் படம் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். படத்தில் வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பான கதாபாத்திரம் அமைந்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் வரவேற்பில்லை

தெலுங்கு மாநிலங்களில் வரவேற்பில்லை

இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீசாகியுள்ளது. படத்திற்கான டப்பிங்கை சூர்யாவே பேசியிருந்தார். மேலும் தெலுங்கிலும் பிரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் ரிலீசானது. ஆனால் தெலுங்கு மாநிலங்களில் படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்

திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட படம்

இந்நிலையில் இன்றைய தினம் பிரபாசின் ராதே ஷ்யாம் வெளியாகியுள்ளதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழ் பதிப்பை பல திரையரங்குகளில் இருந்து தூக்கியுள்ளனர். படம் திரையிடப்பட்டு ஒரே நாளில் அனைத்து திரையரங்குகளிலும் தமிழ் பதிப்பு தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராதே ஷ்யாம் படமே காரணம்

ராதே ஷ்யாம் படமே காரணம்

தெலுங்கு பதிப்பு மட்டுமே இப்போது ஓடிக் கொண்டிருப்பதாகவும் அதுவும் குறைவான திரையரங்குகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராதே ஷ்யாம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முன்பதிவில் மட்டும் ஐதராபாத்திரல் 4 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

முன்னதாக வெளியான பீம்லா நாயக் முன்பதிவில் ஐதராபாத்தில் 4.73 கோடி ரூபாய்களை வசூலித்தது. ஆனால் தொடர்ந்து அந்தப் படம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் பிரபாசின் ராதே ஷ்யாம் மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X