முதல்ல தீம் மியூசிக்... இப்ப ஸ்டில்ஸ்... அதிரி புதிரி வெற்றிக்கு தயாராகும் சூர்யா படம்

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

இந்தப் படம் வரும் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் தற்போதே முடுக்கி விட்டுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தை வெற்றிப்பட இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பசங்க 2 படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இவர் இணைந்துள்ளார்.

டி இமான் இசை

டி இமான் இசை

மேலும் படத்தில் சூரி, திவ்யா துரைசாமி, தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் வினய் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவையும் டி இமான் இசையையும் மேற்கொண்டுள்ளனர்.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்து வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. படம் பிப்ரவரி 4ம் தேதி ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் மற்றும் அதையொட்டிய கட்டுப்பாடுகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 10ல் ரிலீஸ்

மார்ச் 10ல் ரிலீஸ்

தற்போது தளர்வுகள் நீக்கப்பட்டாலும் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கே அனுமதி என்ற கட்டுப்பாடு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், டான் போன்ற படங்களில் மார்ச் மாதத்தில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படமும் மார்ச் 10ம் தேதி திரையிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

விறுவிறு பிரமோஷன்

விறுவிறு பிரமோஷன்

படத்தின் பிரமோஷன் பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இவையும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஸ்டில்ஸ் வெளியீடு

ஸ்டில்ஸ் வெளியீடு

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சூர்யா பெண்களுடன் அமர்ந்து உற்சாகத்துடன் காணப்படுகிறார். மற்றொரு ஸ்டில்லில் துப்பாக்கியை கொண்டு இலக்கை குறி வைக்கும்படி காணப்படுகிறார். குடும்பத்தினருடனும் காணப்படுகிறார். வித்தியாசமான ஸ்டில்களாக உள்ளது.

பாண்டிராஜ் உற்சாகம்

பாண்டிராஜ் உற்சாகம்

இந்தப் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகரும் விரும்பப்படுவார்கள் மற்றும் அந்த கேரக்டரில் தன்னை பொருத்திப் பார்ப்பார்கள் என்று இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இது குடும்ப கதை இல்லை என்றும் ஆனால் குடும்பங்களுக்கான கதை என்றும் கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X