நம்பள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது... பறந்து பறந்து அடிக்கும் சூர்யா... டீசர் வெளியீடு

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதனிடையே படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. டீசர் மிரட்டலாக உள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

கிராமத்து பின்னணி

கிராமத்து பின்னணி

சிவகார்த்திகேயனின் எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்சுடன் பாண்டிராஜ் எதற்கும் துணிந்தவன் படம் மூலம் இணைந்துள்ளார். மேலும் எங்க வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களை போலவே இந்தப் படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் அடுத்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசர் வெளியீடு

படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படம் வெளியாவதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியானது. டீசர் மிரட்டலாக அமைந்துள்ளது. மிரட்டலாக இந்த டீசர் காணப்படுகிறது.

டி இமான் இசை

டி இமான் இசை

படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் மூன்று பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன. படத்தின் டீசர் வெளியீடு குறித்து அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார். பின்னணி இசையிலும் இமான் மிரட்டியுள்ளார். பசங்க 2 படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் பாண்டிராஜ் மற்றும் சூர்யா இணைந்துள்ளனர்.

தெலுங்கில் ரிலீஸ்

தெலுங்கில் ரிலீஸ்

தெலுங்கிலும் இந்தப் படம் மார்ச் 10ம் தேதியே வெளியாகவுள்ளது. தெலுங்கில் சூர்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் காணப்படும் நிலையில், சமீபத்தில் தெலுங்கில் படத்திற்கான டப்பிங்கை சூர்யா தானே மேற்கொண்டார். இதன் புகைப்படங்களுலும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சமூக அக்கறை

சமூக அக்கறை

இது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக சூர்யா இந்தப் படத்தில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சமூக அக்கறையுடன் அவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் வெற்றியடைந்துள்ள நிலையில், இந்தப் படமும் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X