டிசம்பரில் ரசிகர்களை காணவருகிறான் 'எதற்கும் துணிந்தவன்'

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிவரும் படம் எதற்கும் துணிந்தவன்.

இந்தப் படத்தின் முதல் பாடல் இந்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயல்பான நடிகர் சூர்யா

இயல்பான நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா விதவிதமான கெட்டப்புகளில் பலவிதமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சூர்யா படத்திற்கு ரசிகர்கள் போனால், கண்டிப்பாக என்டர்டெயின்மெண்ட்டுடன் சமூக கருத்துக்களையும் பெற முடியும். இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் சூர்யா.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் டைரக்ஷனில் சூர்யா நடித்துவரும் படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் இந்த மாதத்தில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய கதாபாத்திரத்தில் சூரி

முக்கிய கதாபாத்திரத்தில் சூரி

இந்தப் படத்தில் காமெடியுடன் கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் சூர்யா, இந்தப் படம் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டத்தை அளிக்கும் என்று தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவரது பிறந்தநாளை படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இமான் இசையமைப்பு

இமான் இசையமைப்பு

மேலும் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இசையை இமான் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த படமாக இந்தப்படம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பரில் ரிலீஸ்

டிசம்பரில் ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படம் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட்ரும் டைட்டிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படமும் ரசிகர்களின் விருப்பத்திற்னுகுரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X