ஹாட்ரிக் அடித்தாரா சூர்யா? ரசிகர்களை திருப்தி படுத்தியதா எதற்கும் துணிந்தவன்? ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை அதிகாலையிலேயே பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Etharkkum Thunindhavan Audience Opinion | Suriya | Pandiraj | D Imman | Tamil Filmibeat

இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவுக்கு செம மாஸ் ஓப்பனிங் சீனை இயக்குநர் பாண்டிராஜ் வைத்துள்ளார் என வீடியோவுடனே ஷேர் செய்து வருகின்றனர்.

அதே போல இன்டர்வெல் சண்டை பிளாக்கும் வெறித்தனம் என தங்களது விமர்சனத்தை கூறி உள்ளனர். மக்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களை இங்கே பார்ப்போம்..

மரண மாஸ்

மரண மாஸ்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மரண மாஸ், பாண்டிராஜின் ஃபேமிலி சென்டிமென்டல் காட்சிகள் பக்கா என்றும், இன்டர்வெல் சீன் கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளதாகவும், ஒட்டுமொத்த திரைப்படத்தையும் சூர்யா சுமந்து சூப்பராக நடித்திருக்கிறார் என்றும் இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

செகண்ட் ஹாஃப் போர்

செகண்ட் ஹாஃப் போர்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு இந்த அஜித் ரசிகர், ஃபர்ஸ்ட் ஹாஃப் ஃபைட் சூப்பர் என்றும் செகண்ட் ஹாஃப் சுத்த போர் என்றும் கிளைமேக்ஸ் சூப்பர் என்றும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கொஞ்சம் சொதப்பல்களை இயக்குநர் பாண்டிராஜ் தவிர்த்து இருந்தால், வேறலெவல் படமாக எதற்கும் துணிந்தவன் வந்திருக்கும் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படமும் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கமர்ஷியல் பிளஸ் கதை கலந்து அனைத்து சென்டர் ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாடல்கள் சொதப்பல்

பாடல்கள் சொதப்பல்

"சூர்யாவின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் நல்லாத்தான் இருக்கு இந்த மாதிரி கதை களம் தேர்வு செய்ய ஒரு தைரியம் வேணும் சென்ட்டிமென்ட் நல்லா இருக்கு பாடல் தான் தேவையில்லை" என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

வின்னர்

வின்னர்

மாஸ் மசாலா கலந்த ஆக்‌ஷன் படத்தில் சூர்யாவின் முத்திரையான சமூக கருத்துக்களும் கலந்து இந்த எதற்கும் துணிந்தவன் வின்னராக மாறியுள்ளது என இந்த ரசிகர் தனது கருத்தை முன் வைத்து இருக்கிறார். சமூக வலைதளங்கள் முழுக்கவே சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வந்து விழுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X