திரையரங்குகளில் அதிரடியாக 25 நாட்களை கடந்த சூர்யா படம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது எதற்கும் துணிந்தவன் படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தப் படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியானது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது. சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீசானது.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீசானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். கிராமத்து கெட்டப்பில் சூர்யா இந்தப் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகியிருந்தார் பிரியங்கா மோகன்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான படம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் பாண்டிராஜ். பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் இக்கட்டான சூழல்களில் அவர்கள் எவ்வாறு துணிவாக செயல்பட வேண்டும் என்பதையும் இந்தப்படம் எடுத்து சொன்னது.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. சூர்யாவின் 40வது படமாக இந்தப் படம் உருவாகியிருந்தது. இமான் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கமர்ஷியல் அம்சங்கள்

கமர்ஷியல் அம்சங்கள்

பாலியல் வன்கொடுமை என்ற முக்கியமான கதைக்களத்தை எடுத்திருந்தாலும் படத்தில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக எடுத்து கூறியுள்ளார் பாண்டிராஜ். இதனிடையே நாளைய தினம் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

25 நாட்களை கடந்த படம்

25 நாட்களை கடந்த படம்

இந்நிலையில் படம் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி 25 நாட்களை கடந்துள்ளது. இதுகுறித்து படத்தை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளது. படம் சிறப்பான வசூலை தயாரிப்புத் தரப்பிற்கு பெற்றுத் தந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X