சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தாறுமாறு வால்பேப்பர்கள் வெளியீடு... ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
வரும் பிப்ரவரி 4ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

எதற்கும் துணிந்தவன் படம்
நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் எதற்கும் துணிந்தவன். முன்னதாக சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில் இந்தப் படம் கவனத்தைப் பெற்றுள்ளது.

சிறப்பான கதைத்தேர்வு
தன்னுடைய படங்களின் கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படமும் சிறப்பான வகையில் உருவாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் படத்தின் ரிலீசை தள்ளிப் போடுமா அல்லது திட்டமிட்டபடி படம் திரையரங்குகளில் ரிலீசாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
இந்தப் படத்தில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா என அடுத்தடுத்த பாடல்கள் இமான் இசையில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியான நிலையில், படத்தின் பிரமோஷனுக்கு பாடல்கள் மிகுந்த உதவியாக அமைந்துள்ளன.

ஆஸ்கர் கதவை தட்டிய ஜெய் பீம்
இவரது ஜெய் பீம் படம், முந்தைய படமான சூரரைப் போற்று படம் போலவே ஆஸ்கர் கதவுகளை தட்டியுள்ளது. மேலும் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் ஆஸ்கரை வெல்லுமா என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகனுக்கும் உள்ளது. இந்நிலையில் முன்னதாகவே எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாக உள்ளது.

வழக்கறிஞராக சூர்யா?
தன்னுடைய ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் படங்களில் நடித்துவரும் சூர்யா, இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முந்தைய ஜெய் பீம் படம் போலவே இந்தப் படமும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

வால்பேப்பர்கள் வெளியீடு
இந்நிலையில் தொடர்ந்து படத்தின் பிரமோஷன் பணிகளில் சன் பிக்சர்ஸ் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் வால்பேப்பர்கள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் சும்மா சுர்ருன்னு என்ற பாடல் வெளியிடப்பட்டு வைரலான நிலையில் தற்போது இந்த வால் பேப்பர்களும் வைரலாகி வருகின்றன.

வால்பேப்பர்கள் மாற்றும் நேரம்
இந்த வால்பேப்பர்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ், வால்பேப்பர்களை ரசிகர்கள் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு இந்த வால்பேப்பர்கள் கொண்டாட்டத்தை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications











