வேட்டிய கட்டுனா நான்தான்டா ஜட்ஜ்... ஆவேசமான சூர்யா... குஷியான ரசிகர்கள்!
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் வரும் 10ம் தேதி ரிலீசாக உள்ளது எதற்கும் துணிந்தவன்.
Recommended Video
இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் மாளவிகா மோகனன்.
படத்தின் பிரமோஷன் பணிகளில் தற்போது சன் பிக்சர்ஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். மேம்படுத்தப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாநாடு படம் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் சர்வதேச அளவில் பாராட்டுக்களை குவித்துள்ளது. விருதுகளையும் பெற்றுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் மாளவிகா மோகனன். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

சிறப்பான பிரமோஷன்
படத்திற்கு இமான் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை வெளியான மூன்று பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. அறிமுக பாடல், மெலடி பாடல் என பட்டையை கிளப்பியுள்ளார் இமான். இந்நிலையில் படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாக உள்ளதையடுத்து படத்தின் பிரமோஷன்களும் சிறப்பான வகையில் அமைந்துள்ளன.

அதிகரித்த எதிர்பார்ப்பு
படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர், போஸ்டர்கள் என அடுத்தடுத்த அப்டேட்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பிரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சூர்யா சிறப்பாக காணப்படுகிறார்.

புதிய பிரமோ வெளியீடு
சிறப்பான கட்களுடன் காணப்படும் இந்த பிரமோவில் வேட்டியை கட்டினா நான் ஜட்ஜ்டா என்று வீர வசனம் பேசுகிறார் சூர்யா. இந்தப் படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக செயல்படும் கேரக்டரில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











