அப்போ பிப்ரவரிக்கு ரிலீஸ் இல்லை... எவ்ளோ நாள் ரசிகர்களை காக்க வைப்பீங்க?

சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

இந்தப் படம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி மத்தியில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பசங்க 2 படத்திற்கு பிறகு பாண்டிராஜ் -சூர்யா இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

பசங்க 2 படத்தில் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இந்நிலையில் தற்போது ஆக்ஷரோஷமான வில்லேஜ் ஆசாமியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. படம் பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீசை சன் பிக்சர்ஸ் தள்ளி வைத்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி மத்தியில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மார்ச்சில் ரிலீஸ்?

மார்ச்சில் ரிலீஸ்?

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களே தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் ட்வீட்

பாண்டிராஜ் ட்வீட்

பெரும்பாலும் மார்ச் 11ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் ரிலீசாக உள்ளதாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சூரரைப் போற்று, ஜெய்பீம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. ஆனால் இரண்டு படங்களும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் கண்டிப்பாக திரையரங்குகளில் ரிலீசாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X