நவரசாவில் சூர்யா.... மாலையில் வெளியாகும் தூரிகா பாடல்... வெளியான ப்ரோமோ

சென்னை : நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்ப்ளிக்சில் வெளியாகவுள்ளது நவரசா ஆந்தாலஜி வெப் சீரிஸ்.

இதில் 9 படங்களை ஒன்பது இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்றைய தினம் வெளியாகவுள்ளது.

ஆகஸ்ட் 6ல் ரிலீஸ்

ஆகஸ்ட் 6ல் ரிலீஸ்

நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகவுள்ளது நவரசா ஆந்தாலஜி வெப் சீரிஸ். 9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் 9 படங்கள் இதில் இடம் பெற்றுள்ளனன. நவரசங்களை வெளிப்படுத்தும் வகையில் இது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 படங்கள்

9 படங்கள்

இந்த படத்தில் கௌதம் மேனன், அரவிந்த் சாமி உள்ளிட்ட 9 இயக்குநர்கள் பணிபுரிந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் உள்ள திரைத்துறை ஊழியர்களின் நலனை மையமாக கொண்டு நவரசா உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா நடிப்பு

சூர்யா நடிப்பு

மணிரத்னம் உருவாக்கியுள்ள இந்த நவரசாவில் கௌதம் மேனன் உருவாக்கியுள்ள கிடார் கம்பி மேலே நின்று என்ற படத்தில் நடிகர் சூர்யா, பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யாவை காண முடிகிறது.

மாலை வெளியீடு

மாலை வெளியீடு

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் இசையில் மதன் கார்க்கி வரிகளில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X