Don't Miss!
- News
அந்த 7 மணி நேரம்.. மேஜையில் பைல்களை எடுத்து வைத்த எடப்பாடி.. யார் அந்த ஒருவர்? பறந்து வந்த உத்தரவு
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சூர்யாவோட சூப்பர் ஹீரோ படம்.. மீண்டும் தூசித்தட்டப்படும் இரும்புக்கை மாயாவி..தயாரிப்பாளர் அப்டேட்!
சென்னை : நடிகர் சூர்யாவின் இரும்புக்கை மாயாவி படம் அறிவிக்கப்பட்டதோடு நிறுத்தப்பட்டது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தியிருந்தது. சூர்யாவை இதுபோன்ற சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருந்த இந்தப் படம் மீண்டும் துவங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பாகுபலி
2
வசூலை
தமிழ்நாட்டில்
ரஜினி,
அஜித்,
விஜய்
முறியடிப்பாங்கன்னு
பார்த்தா..
கமல்
கலக்கிட்டாரே!

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, தொடர்ந்து சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் தற்போது விக்ரம் என வேறுவேறு கெட்டப்புகளில் வெளியான படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் அடுத்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்
சூர்யாவின் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தொடர்ந்து அவரது ரசிகர் வட்டமும் அதிகமாகியுள்ளது. அவரும் தனது ரசிகர்களை அவர்களது உணர்வுகளை வெகுவாக மதித்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கே சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கதைத்தேர்வில் கவனம்
தொடர்ந்து கதைத் தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படம் பயோ பிக்காக வெளியான நிலையில், ஜெய்பீம் படத்தில் நியாயத்திற்காக போராடும் வழக்கறிஞராக நடித்திருந்தார். தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.

மிரட்டலான கேங்ஸ்டர்
இந்த மூன்று கேரக்டர்களும் அவரது ஹீரோயிசத்தை உயர்த்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தில் அப்படியே தன்னுடைய கேரக்டரை மாற்றிக் காட்டியுள்ளார். இந்தப் படத்தில் ரோலக்ஸ் என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார் சூர்யா. தான் இவ்வாறு கேங்ஸ்டராக மாற 27 ஆண்டுகளை செலவிட்டதாக கூறி, அவர் கொலை செய்யும் இடம் மிகவும் மிரட்டலாக அமைந்திருந்தது.

மிரட்டும் ரோலக்ஸ்
தன்னுடைய முதல்படத்தில் அப்பாவித்தனமாக முகபாவத்துடன் நடித்திருந்த சூர்யா, தற்போது ரோலக்சாக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரோலக்ஸ் கேரக்டர் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்களுக்கு அதிரடி அனுபவத்தை கொடுத்துள்ளது.

சூப்பர் ஹீரோ கதை
இந்த கேரக்டரின் முழுமையான கதையை விக்ரம் 3 படத்தில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்தான் உருவாக உள்ளதாக கமல்ஹாசன் படத்தின் பிரமோஷனின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் சூர்யா -லோகேஷ் காம்பினேஷனில் முன்னதாக திட்டமிடப்பட்ட சூப்பர் ஹீரோ கதை குறித்து தற்போது கேள்வி எழும்பியுள்ளது.

விரைவில் இரும்புக்கை மாயாவி
இதனிடையே இரும்புக்கை மாயாவி படத்திற்கான வேலைகள் விரைவிலேயே துவங்கவுள்ளதாக அந்தப் படத்தை தயாரிக்கவிருந்த தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தற்போது தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டு, போஸ்டர்கள் சிறப்பான வகையில் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நிறுத்தப்பட்ட இரும்புக்கை மாயாவி
மாநகரம் படத்தை முடித்தக் கையோடு லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இரும்புக்கை மாயாவி படத்திற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால் தான் ஒரு சிறிய படத்தை மட்டுமே இயக்கியிருந்த நிலையில், தன்னை மேலும் சிறப்பாக வெளிப்படுத்திய பின்பே, இத்தகைய கதையை கையில் எடுக்க வேண்டும் என்பதால் இந்தப் படத்தை தான் டிராப் செய்தததாக சமீபத்தில் லோகேஷ் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

ரவிக்குமார் -சூர்யா படம்
இதனிடையே இரும்புக்கை மாயாவி படத்தை போலவே சூர்யா மற்றும் இயக்குநர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள சயின்ஸ் பிக்ஷன் படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாலா இயக்கத்தில் சூர்யா
தற்போது பாலா இயக்கத்தில் நடித்துவரும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். தொடர்ந்து சுதா கொங்கரா, சிவா போன்ற இயக்குநர்களுடனும் அவர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ், ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்தப் படங்கள் குறித்து எஸ்ஆர் பிரபு கூறியுள்ளார்.