சூர்யா படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கிய தணிக்கை குழு.. ஜெய் பீம் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: வரும் தீபாவளியை முன்னிட்டு ஒடிடி வெளியீடாக ரிலீசாக உள்ள நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சர்ட்டிபிகேட் வழங்கி உள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நிஜ வழக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ஜெய் பீம்.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து கர்ணன் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

சூரரைப் போற்று போலவே
கடந்த ஆண்டு தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் சூர்யா தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. ஏகப்பட்ட விருதுகளையும் தொடர்ந்து வென்று வருகிறது. அதே போல இந்த ஆண்டு தீபாவளிக்கும் சூர்யா ஒரு சரவெடி ஒடிடி ரிலீஸை வைத்திருக்கிறார்.

ஜெய் பீம்
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நவம்பர் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் வழக்கறிஞராக சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏ சர்ட்டிபிகேட்
வழக்கமாக ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படங்களில் நடித்து வந்த நடிகர் சூர்யா, கதையின் ஆழத்தை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டு நடித்துள்ளார். ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு எந்தவொரு 'கட்'டும் கொடுக்காமல் 'ஏ' சர்ட்டிபிகேட்டை தணிக்கை குழு கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு உக்கிரமான காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தில் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரன்னிங் டைம்
இந்த படத்தின் ரன்னிங் டைம் 164 நிமிடங்கள் என தற்போது தணிக்கை செய்யப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட புதிய போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர். 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த படம் நிச்சயம் சூர்யாவுக்கு இன்னொரு சூரரைப் போற்று போல இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்து சம்பவம்
ஜெய் பீம் மட்டுமல்ல அடுத்ததாக சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் மற்றும் வாடிவாசல் என அடுத்தடுத்த சம்பவங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்க காத்திருக்கின்றன. 2டி நிறுவனத்தின் மூலம் மாதம் ஒரு புதிய படத்தை சூர்யா ரிலீஸ் செய்து செம பிசியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











