twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூரரைப் போற்று விட்ட இடத்தை பிடிக்குமா ஜெய் பீம்... ஆஸ்கர் பந்தயத்தில் ஜெய் பீம்

    |

    சென்னை : ஆஸ்கர் படங்களின் பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் இறுதிவரை சென்று கோட்டை விட்டது.

    இந்நிலையில் தற்போது அவரது ஜெய் பீம் படமும் ஆஸ்கர் படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    இநநிலையில் கடந்த படத்தில் விட்டதை இந்த படத்தில் சூர்யா பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ஜெய் பீம், மரக்காயர் படங்கள் ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ஜெய் பீம், மரக்காயர் படங்கள்

    சூரரைப் போற்று படம்

    சூரரைப் போற்று படம்

    நடிகர் சூர்யா தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த சூரரை போற்று படம் சிறப்பான படமாக காணப்பட்டது. இந்தப் படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது.

    சிறப்பான ஜெய் பீம் படம்

    சிறப்பான ஜெய் பீம் படம்

    ஒரு சாமானிய நபர் எவ்வாறு எளிமையான விமான பயணத்தை சாதாரண மக்களுக்கு கொடுக்கிறார் என்பதை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சூர்யாவின் சினிமா கேரியரில் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அவரது அடுத்த படமான ஜெய் பீம் படமும் அவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது.

    சூர்யா நடிப்பு + தயாரிப்பு

    சூர்யா நடிப்பு + தயாரிப்பு

    அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் அமேசான் பிரைமில் நேரடியாக இந்தப் படமும் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போதும் இந்தப் படம் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகிறது. ஐஎம்டிபியில் 9.6 புள்ளிகளுடன் இந்தப் படம் முதலிடத்தை பெற்றது ஒரு சிறப்பு.

    அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்

    அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்

    தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தப் படம் பல்வேறு பாராட்டுக்களை பெற்று வருகிறது. பழங்குடியின பெண்ணுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்கர் பட்டியலில் ஜெய் பீம்

    ஆஸ்கர் பட்டியலில் ஜெய் பீம்

    சூரரை போற்று படம் ஆஸ்கர் பந்தயத்தில் கலந்து கொண்டு சிறந்த பட பரிந்துரைக்கு தேர்வாவதற்காக இறுதி கட்டத்தில் தேர்வாகாமல் வெளியேறியது. இந்நிலையில் சிறந்த 276 படங்களில் ஒன்றாக தற்போது ஜெய் பீம் படம் ஆஸ்கருக்கு பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.

    ஆஸ்கருக்கு தேர்வாகுமா ஜெய் பீம்?

    ஆஸ்கருக்கு தேர்வாகுமா ஜெய் பீம்?

    வரும் பிப்ரவரி மாதத்தில் சிறந்த பரிந்துரைகளின் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், அதில் ஜெய் பீம் படம் தேர்வாகுமா என்று அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்துள்ளனர். அவ்வாறு தேர்வாகி படம் ஆஸ்கரை வென்றால் அது ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் தருணமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    உலக அளவிலான பிரச்சினை

    உலக அளவிலான பிரச்சினை

    படம் உலக அளவிலான ஒரு பிரச்சினையை முன்னெடுத்துள்ளது. காலங்காலமாக அடிமட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் நசுக்குவது என்பது நடந்துக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு குரல் கொடுப்பது என்பது சாதாரணமாக நடந்து விடுவதில்லை.

    பழங்குடியினரின் பிரச்சினை

    பழங்குடியினரின் பிரச்சினை

    இந்நிலையில், பழங்குடியின சமுதாயம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையையும் அதற்கு வழக்கறிஞர் ஒருவரின் துணையையும் கதைக்களமாக கொண்டு ஜெய் பீம் படம் வெளியாகியுள்ளது அனைத்து தரப்பினரின் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது. இந்தப் படம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

    ரசிகர்கள் ஆதரவு

    ரசிகர்கள் ஆதரவு

    இத்தகைய கவனிக்கப்படாத விஷயங்களை முன்னெடுத்து வருவது சமீபகாலங்களாக தமிழ் சினிமாவில் நடைபெற்று வருவது வரவேற்புக்குள்ளாகி வருகிறது. சமூக பிரச்சினைகளை முன்னெடுத்து மக்களின் பார்வைக்கு கொண்டுவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ரசிகர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    சமூக பிரச்சினை

    சமூக பிரச்சினை

    அந்த வகையில் ஒரு பெரிய சமூக பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள ஜெய் பீம் படம் ஆஸ்கரை வென்றால் அதன்மூலம் இந்த பிரச்சினைக்கு சர்வதேச அளவில் தீர்வு ஏற்படவும் வாய்ப்பு ஏற்படலாம். தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் சூர்யாவிற்கு இந்தப் படம் ஆஸ்கரை பெற்றுத் தருமா என்பதை காண இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

    English summary
    Surya's Jai bhim movie will win oscars?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X