கையில எடு பவர... ஜெய் பீம் படத்தின் மிரட்டலான முதல் பாடல் வெளியானது!

சென்னை : நடிகர் சூர்யா மாறுபட்ட வேடத்தில் நடித்து தயாரித்துள்ள படம் ஜெய் பீம்.

இந்தப் படம் வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மிரட்டலான முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

நடிகர் சூர்யா, ரஜீஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். தா சே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது.

வழக்கறிஞராக சூர்யா

வழக்கறிஞராக சூர்யா

படத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், படம் வரும் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்ட சூர்யா, உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என்றும் மகிழ்விப்பதை காட்டிலும் உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய் பீம் என்றும் தெரிவித்திருந்தார்.

முதல் சிங்கிள் வெளியீடு

முதல் சிங்கிள் வெளியீடு

மேலும் டீசரின் காட்சிகளும் சிறப்பான வகையில் அமைந்திருந்தது. வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப்பில் 5 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் கையில எடு பவர என்று துவங்குகிறது.

லிரிக் வீடியோ பாடல்

லிரிக் வீடியோ பாடல்

லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடல் வலிமையான வரிகளை கொண்டுள்ளது. அறிவு இந்தப் பாடலின் வரிகளை எழுதி பாடலையும் பாடியுள்ளார். பாடலில் படத்தின் சூர்யா இடம்பெற்றுள்ள சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் அறிவு பாடல் பாடும் வீடியோவும் இணைந்துள்ளது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சிறப்பான பல படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. சிறப்பான பல படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஜெய் பீம் படம் வெளியாகவுள்ளது.

Recommended Video

ரொம்ப வருஷம் கழிச்சு Samuthirakani Call பண்ணினார் | Actor Deepak Exclusive | Filmibeat Tamil
ஜோதிகாவுடன் இணைந்து தயாரிப்பு

ஜோதிகாவுடன் இணைந்து தயாரிப்பு

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சிறப்பான சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை கூறும் படங்களை தயாரித்து வருகிறார் சூர்யா. ஜோதிகாவுடன் இணைந்து இந்த தயாரிப்புப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X