Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் புதிய போஸ்டர்... ட்ரெயிலர் குறித்த அறிவிப்பு
சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது ஜெய் பீம்.
வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
சன்னி லியோன் இன்னைக்கு லீவு.. தர்ஷா குப்தாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கும்மாளம் அடித்த சதீஷ்!
படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ட்ரெயிலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து சமூக கருத்துக்கள் தனது படங்களில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்கிறார் சூர்யா.

உடன்பிறப்பே படம்
மேலும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமும் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் சசிக்குமார், சமுத்திரக்கனி இணைந்து நடித்திருந்த உடன்பிறப்பே படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது.

ஜெய் பீம் படம்
இந்நிலையில் தற்போது அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் தீபாவளியையொட்டி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. தா சே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா பழங்குடியினரின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ட்ரெயிலர் குறித்த அறிவிப்பு
படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் படத்திற்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ளநிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நாளை ட்ரெயிலர் ரிலீஸ்
இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோ சார்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெயிலருக்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தியாக மாறியுள்ளது.

ஷான் ரோல்டன் இசை
இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், பல நாடுகளில் அமேசான் ப்ரைம் மூலமாக இந்தப் படத்தை பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பை ஷான் ரோல்டன் செய்துள்ள நிலையில் சமீபத்தில் அறிவு குரலில் வெளியான பாடல் சிறப்பான வரவேற்பையும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.