இயல்பான மனிதர்களின் வாழ்வியல்... வேட்டைக்கார கூட்டம் வீடியோ பாடல் வெளியீடு

சென்னை : நடிகர், சூர்யா, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ளது ஜெய் பீம் படம்.

இந்தப் படம் பழங்குடியினரின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அதற்கு தீர்வு காண முயலும் வழக்கறிஞரையும் கண்முன்னே நிறுத்துகிறது.

இந்நிலையில் இயல்பான அந்த மனிதர்களின் வாழ்வியலை கூறும் வேட்டைக்கார கூட்டம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

நடிகர் சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2ம் தேதி தீபாவளியையொட்டி வெளியான படம் ஜெய் பீம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தொடர் பாராட்டுக்கள்

தொடர் பாராட்டுக்கள்

இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டினையும் பெற்றுள்ளது. தொடர்ந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது. சில சர்ச்சைகளையும் உருவாகியுள்ளது இந்தப் படம்.

சூர்யாவிற்கு எதிராக கண்டனம்

சூர்யாவிற்கு எதிராக கண்டனம்

நடிகர் சூர்யாவிற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்ததையும் தவிர்க்க முடியவில்லை. காலண்டர் சர்ச்சையில் படம் சிக்கியதையடுத்து படத்தின் இயக்குநர் டிஜே ஞானவேல் தனது வருத்தத்தை இன்றைய தினம் தெரிவித்துள்ளார். ஒரு இயக்குநராக இந்த சர்ச்சைக்கு தானே பொருப்பு என்றும் ஆனால் தேவையில்லாமல் சூர்யாவிற்கு சங்கடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வருத்தம்

இயக்குநர் வருத்தம்

இந்த விவகாரம் தற்செயலாக நடைபெற்றது என்றும் எந்தவிதமான நோக்கமும் இதன் பின்னணியில் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தோள் கொடுத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

ரசிகர்களிடையே தாக்கம்

ரசிகர்களிடையே தாக்கம்

இந்நிலையில் படம் ஏற்படுத்திய தாக்கமும் அதன் திரைக்கதை உள்ளிட்டவை ஏற்படுத்தியுள்ள பாதிப்பும் ரசிகர்களிடையே இன்னும் அகலவில்லை. ஐஎம்டிபி இணையதளத்தில் இந்தப் படம் முதலிடத்தை பிடித்துள்ளது இதற்கு முக்கியமான உதாரணமாக காணப்படுகிறது.

வீடியோ பாடல் வெளியீடு

வீடியோ பாடல் வெளியீடு

இதனிடையே படத்தின் வேட்டைக்கார கூட்டம் நாங்க வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பழங்குடியினரின் அழகான வாழ்வியலை இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. இயல்பான அவர்களது வாழ்க்கை மற்றும் சடங்குகள் உள்ளிட்டவை இந்தப் பாடலில் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X