twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யாவின் ‘ஜெய்பீம்’, டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’: யார் சம்பவம் செய்றாங்கன்னு பார்ப்போம்?

    |

    மெல்போர்ன்: சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம் தொடர்ந்து சர்வதேச அளவில் கனவம் ஈர்த்து வருகிறது.

    12வது சர்வதேச பெய்ஜிங் திரைப்பட விழாவில் டியாண்டன் விருதை வென்று அசத்திய 'ஜெய் பீம்.'

    இந்நிலையில், இத்திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் 3 மிக முக்கியமான பிரிவுகளில் போட்டியிடுகிறது.

    உலகெங்கும் ஒலிக்கிறது சூர்யாவின் ஜெய்பீம்.. மெல்போர்ன், சீனா என தொடரும் சர்வதேச அங்கீகாரம்! உலகெங்கும் ஒலிக்கிறது சூர்யாவின் ஜெய்பீம்.. மெல்போர்ன், சீனா என தொடரும் சர்வதேச அங்கீகாரம்!

    ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜெய் பீம்

    ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜெய் பீம்

    தஜெ ஞானவேல் இயக்கத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. இதில், சூர்யா ரொம்பவே மாறுபட்ட உடல்மொழியுடன் வழக்கறிஞராக நடித்திருந்தார்.

    ஆஸ்கர் கதவை தட்டிய ஜெய் பீம்

    ஆஸ்கர் கதவை தட்டிய ஜெய் பீம்

    1993ல் ராஜகண்ணு என்பவரின் லாக் அப் டெத், பல சர்ச்சைகளை எழுப்பியது. அதையே 'ஜெய் பீம்' படமாக இயக்கியிருந்தார் தஞெ ஞானவேல். இந்தப் படத்திற்கு எதிர்பாராத அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்தது, அதேபோல், சில காட்சிகள் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இருந்தாலும், சர்வதேச அளவில் கோல்டன் குளோப், ஆஸ்கர் வரை பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும், ஆஸ்கர் யூடியூப் சேனலில், ஜெய் பீம் படம் இடம்பெற்றது.

    பெய்ஜிங் திரைப்பட விழாவில் சாதனை

    பெய்ஜிங் திரைப்பட விழாவில் சாதனை

    'ஜெய் பீம்' படத்திற்கு தொடர்ச்சியாக பல தரப்புகளில் இருந்தும் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. இதனிடையே, சீனாவின் 12வது சர்வதேச பெய்ஜிங் திரைப்பட விழாவிலும் 'ஜெய் பீம்' திரையிடப்பட்டது. மேலும், சிறந்த திரைப்படம் என்ற டியாண்டன் விருதையும் வென்று சாதனை படைத்தது. முன்னதாக, தனது 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் சூர்யா வென்றிருந்தார். அதோடு, மொத்தமாக 5 தேசிய விருதுகளை 'சூரரைப் போற்று' திரைப்படம் வென்றிருந்தது.

    மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா

    மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இம்மாதம் நடைபெரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 'ஜெய் பீம்' படம் திரையிடப்படுகிறது. இது ஏற்கனவே வெளியான அறிப்பாக இருந்தாலும், இப்போது சிறப்பான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இதில், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த படம் 'ஜெய் பீம்', சிறந்த நடிகை லிஜோமோல் ஜோஸ் ஆகிய 3 பிரிவுகளில் விருதுக்கு போட்டியிடுகிறது.

    போட்டியில் மின்னல் முரளி

    போட்டியில் மின்னல் முரளி

    'ஜெய் பீம்' படத்திற்கு போட்டியாக மலையாளத்தில் வெளியான 'மின்னல் முரளி' களத்தில் நிற்கிறது. சூப்பர் ஹீரோ பின்னணியில் உருவான இத்திரைப்படமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிறந்த நடிகருக்கான பிரிவில் ஜெய் பீம் படத்திற்காக சூர்யாவும், மின்னல் முரளி படத்திற்காக டொவினோ தாமஸும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதேபோல், சிறந்த படத்திற்கான பிரிவிலும் 'ஜெய் பீம்', 'மின்னல் முரளி' படங்களுடன் 'பதாய் ஹோ', 'சர்தார் உத்தம்', '83' ஆகிய பாலிவுட் படங்கள் களத்தில் உள்ளன.

    Recommended Video

    Sudha Kongara Prasad | நம்பவே முடியல| Sudha kongara speech about National award |*Kollywood
    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை பிரிவிலும், 'ஜெய் பீம்' நாயகி லிஜோ மோல் இடம்பெற்றுள்ளார். இப்பிரிவில், ஆலியா பட், தீபிகா படுகோனே, வித்யா பாலன் ஆகியோரும் ரேசில் உள்ளனர். இந்த விருது அறிவிப்புகள் வரும் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Suriya's ‘Jai Bhim’ & Tovino Thomas' ‘Minnal Murali’ nominated at Indian Film Festival of Melbourne wards 2022
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X