சூர்யாவின் மாஸ்: கர்நாடக உரிமை ரூ 4 கோடிக்கு விற்பனை
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் கர்நாடக உரிமையை ரூ 4 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து வரும் படம் இந்த மாஸ். இதற்கு முன் வெளியான அஞ்சான் சரியாகப் போகாத நிலையில், அதைப் போக்கும் விதமாக மாஸ் அமையும் என நம்புகிறார்கள்.

வெங்கட் பிரபு
அஜீத்துக்கு மங்காத்தா என்ற பெரும் வெற்றியைத் தந்த வெங்கட் பிரபு மீது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விநியோகஸ்தர்களுக்கும் அத்தனை நம்பிக்கை.

பெரிய விலை
அதன் விளைவு, இதுவரை சூர்யாவின் எந்தப் படமும் விற்காத விலைக்கு மாஸ் படத்தின் கர்நாடக் பதிப்பு விற்பனையாகியுள்ளது.

4 கோடி
பிரபல கன்னட விநியோகஸ்தர் ஸ்ரீகாந்த் இந்தப் படத்தை ரூ 4 கோடிக்கு வாங்கியுள்ளார்.

எமி ஜாக்ஸன்
மாஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். எமி ஜாக்ஸன், பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோடையில்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் கோடை ஸ்பெஷலாக வருகிறது மாஸ்.


Click it and Unblock the Notifications











