»   »  சூர்யாவின் 'எஸ்3' டிசம்பர் 16ல் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யாவின் 'எஸ்3' டிசம்பர் 16ல் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் 'சிங்கம்' 3 ஆம் பாகமான 'எஸ்3' வரும் டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

24' படத்துக்குப் பின் சூர்யா தற்போது 'எஸ்3' படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும், பத்திரிக்கையாளர் வேடத்தில் ஸ்ருதி ஹாசனும் நடித்து வருகிறார்.

surya's “S3” will be released on december 16th

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் பரவின. இந்நிலையில், வரும் டிசம்பர் 16 ஆம் தேதி 'எஸ்3' உலகம் முழுவதும் வெளியாகும், என்று படக்குழுவினர் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

English summary
official announcement for surya's “S3” will be released on december 16th

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil