விமான பயணத்தை எளிமையாக்கிய நாயகன்... ஓராண்டு கொண்டாட்டத்தில் சூரரைப் போற்று!

சென்னை : நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று.

Recommended Video

Theni Surya Fans இன் நெகிழவைக்கும் செயல் | Jai bhim | #closecall | Filmibeat Tamil

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி ஓரு ஆண்டை கடந்துள்ளதையடுத்து ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப் போற்று படம்

சூரரைப் போற்று படம்

நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியான படம் சூரரை போற்று. ஏழை மக்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்ற நாயகனின் ஆசையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

சுதா கொங்கரா இயக்கம்

சுதா கொங்கரா இயக்கம்

இறுதிச்சுற்று வெற்றிப்பட இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அவருக்கும் நல்ல விமர்சனங்களை பெற்றுத்தந்தது. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் விமானப் பயணத்தை சாத்தியப்படுத்த போராடும் நாயகனின் கனவு நனவான விதத்தை இந்தப் படத்தின் மூலம் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

போராட்ட நாயகன்

போராட்ட நாயகன்

நாயகனுக்கான எந்தவிதமான விஷயங்களும் இல்லாமல் இயல்பாக தன்னுடைய வெற்றிக்காக போராடும் நாயகனாக சூர்யா சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். லைசென்ஸ் சிக்கல், பணக்கார விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி என அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகள் படத்தை ரசிகர்களின்பால் ஈர்த்தது.

உண்மைக் கதை

உண்மைக் கதை

ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவான இந்தப் படத்தில் கச்சிதமான மேக்கிங்கை சாத்தியப்படுத்தி கைத்தட்டல்களை பெற்றிருந்தார் சுதா கொங்குரா. நாயகன், நாயகி மட்டுமின்றி படத்தின் அனைத்து கேரக்டர்களும் சிறப்பான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

இந்தப் படத்தின்மூலம் தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா. குறிப்பாக ஊருக்கு வரமுடியாமல் விமானநிலையத்தில் இருப்பவர்களிடம் கெஞ்சி பிச்சையாக கட்டணத்தை கேட்டும்போது அவர் காட்டிய நடிப்பு சிறப்பு.

நாயகி அபர்ணா பாலமுரளி

நாயகி அபர்ணா பாலமுரளி

படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளிக்கும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருந்தது. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார். தன்னுடைய கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருந்தார். காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டவர்களும் படத்திற்கு பலம் சேர்த்திருந்தனர்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

ஜிவி பிரகாஷின் இசையில் காட்டுப்பயலே மற்றும் மண்ணுருண்ட பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. பின்னணி இசையிலும் சிறப்பான வகையில் தன்னுடைய பங்களிப்பை அளித்திருந்தார் ஜிவி. மொத்தத்தில் சிறப்பான ஒரு கதைக்களத்தை எடுத்து அதை சிறப்பாக திரையில் காட்சிப் படுத்திய சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணி சிறப்பு. தற்போது இந்தப் படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X