தீபாவளிக்கு சரவெடி கேட்ட சூர்யா ரசிகர்கள்.. ‘அல்வா’ கொடுத்த படக்குழு.. இப்டி ஏமாத்திட்டீங்களேப்பா!

சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சூரரைப் போற்று படம் தொடர்பான அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைய வேண்டும் என்பதில் சூர்யா தீவிரமாக இருக்கிறார்.

Suryas Soorarai Pottru first look on November 10

அதன்படி கடந்த மாதம் வெளியான காப்பான் திரைப்படம் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாக மட்டுமன்றி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.

இதனால் அவரது அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் இப்படத்தை இயக்குகிறார். உறியடி பட இயக்குனர் விஜயகுமார் வசனம் எழுதியுள்ளார்.

சூரரைப் போற்று படத்தின் அப்டேட்டுக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருந்தனர். தங்களுக்கு ஏதாவது ஒரு அப்டேட் வேண்டும் என வலியுறுத்தி, #WeWantSooraraiPottruUpdate என ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கினர். எனவே தீபாவளி தினத்தன்று சூரரைப் போற்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தீபாவளியையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார்கள் என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அது குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, அவர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். இப்படத்தில் அபர்னா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X