twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட, சூர்யாவின் சூரரை போற்று ‘அவரோட’ வாழ்க்கை வரலாறாமே!

    எட்டாக்கனியாக இருந்த விமான சேவையை நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டச் செய்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை தான் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் கதை.

    |

    Recommended Video

    Actor Suriya Movie: சூரரைப் போற்று வைத்த காரணம்

    சென்னை: சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம், ஒருவருடைய வாழ்க்கை வரலாற்று படம் என்பது தெரியவந்துள்ளது.

    'இறுதிச் சுற்று' சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கிறார். இது சூர்யாவின் 38வது படமாகும்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    வேட்டி சட்டையில் சூர்யா:

    வேட்டி சட்டையில் சூர்யா:

    அதில் ஒரு விமானத்துக்கு அடியில் நின்று, அந்த விமானத்தை சூர்யா அண்ணாந்து பார்ப்பது போல் இருக்கும். மேலும், சூர்யா அதில் வேட்டி, சட்டை அணிந்திருப்பார். இந்த போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.

    லீக்கான கதை:

    லீக்கான கதை:

    இந்நிலையில், சூரரைப் போற்று படத்தின் கதை யாருடையது என்பது தெரியவந்துள்ளது. அதாவது, விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கைதான் இப்படத்தின் கதை என்பது தெரியவந்துள்ளது.

    ஏர்டெக்கான் கோபிநாத்:

    ஏர்டெக்கான் கோபிநாத்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்து, பின்னர் ராணுவத்தில் பணியாற்றியவர் ஜி.ஆர்.கோபிநாத். இவர் வங்க தேசம் உருவான போரில் பங்கேற்றவர். நடுத்தர மக்களும் விமானப் பயணம் செய்யும் வகையில் ஏர்டெக்கான் விமான சேவையை நிறுவினார். பிற்காலத்தில், ஏர்டெக்கான் நிறுவனம், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

    கவிதை:

    கவிதை:

    சூரரைப் போற்று படத்தில் ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு பாரதியின் கவிதை வரிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சூரர் என்றால் சாதித்தவர். சாதித்தவரை போற்றவும் என்பதே இந்த தலைப்பின் அர்த்தம்.

    உரிய அனுமதி:

    உரிய அனுமதி:

    ஜி.ஆர்.கோபிநாத்திடம் முறையாக அனுமதி பெற்றுதான், சுதா கொங்கரா இந்த கதையை உருவாக்கியுள்ளார். கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It has come to know that Surya's 38th film Soorarai Pottru, directed by Sudha Kongara is the bio-pic of former president of Air deccan airways G.R.Gopinath.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X