அமேசானில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இதுதான் ரிலீஸ் தேதி!
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.
Recommended Video
ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.
இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

சுதா கொங்கரா
'துரோகி', 'இறுதிச்சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

உயர்ந்தது பட்ஜெட்
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

விமானத்தில் பாடல்
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, விமானத்தில் நடந்தது. அப்போது இதுவரை விமானத்தில் பயணம் செய்யாத ஏழை மாணவர்கள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் படத்தை ஏப்ரல் இறுதி அல்லது மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டது. இந்நிலையில் ஒடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

அமேசான் பிரைம்
இந்நிலையில், இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் அக்டோபர் 30-ம் தேதி படத்தை வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிடி-யில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











