சூர்யா பிறந்த நாளில் ரிலீஸ் ஆகிறதா சூரரைப்போற்று ட்ரெயிலர்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: சூரரைப் போற்று ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Suriya Vs Vijay தமிழ் சினிமா துறை • Respect Women

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்ஜிகே. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்தப் படமும் ஹிட்டாகவில்லை. இதனால் ஏதாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் சூர்யா.

ட்ரெயிலர் ரிலீஸ்

ட்ரெயிலர் ரிலீஸ்

இந்நிலையில் தான் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது சூரரைப் போற்று திரைப்படம். இந்தப்படத்தின் டீசர் வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

44வது பிறந்தநாள்

44வது பிறந்தநாள்

அதாவது சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யா தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள், ஸ்பெஷல் போஸ்டர்களை ரிலீஸ் செய்து கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஜூலை 23ல் ட்ரெயிலர்?

ஜூலை 23ல் ட்ரெயிலர்?

ரசிகர்களும் சூர்யா பிறந்த நாளில் சூரரைப் போற்று படத்தின் அப்டேட் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதனால் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

ஏர் டெக்கான் நிறுவனர்

ஏர் டெக்கான் நிறுவனர்

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், நடிகரின் பிறந்தநாளில் அப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையின் கதையைப் பற்றியது.

சென்சார் போர்டு பாராட்டு

சென்சார் போர்டு பாராட்டு

ஒரு தொழிலதிபராக மாறும் பைலட் வேடத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து சென்சார் போர்டு குழுவினர் அவரை பாராட்டினர். அதோடு சூரரைப்போற்று படத்திற்கு யு சான்றிதழும் வழங்கினர். இப்படத்தில் அபர்னா பாலமுரளி, பரேஷ் ராவல், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில சூர்யா பாடிய படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் ஹிட்டானது. இதனிடையே இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருவா என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில சூர்யா பாடிய படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் ஹிட்டானது. இதனிடையே இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருவா என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X