'சூரரைப்போற்று' இந்தியில் ரீமேக் ஆகுதாமே... அங்கும் சூர்யாதான் ஹீரோவா? என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்?

By

சென்னை: சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Suriya get emotional on stage | Agaram Foundation 10 yrs celebration

ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

நடிகர் சூர்யா ஜி.ஆர்.கோபிநாத் கேரக்டரில் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

மோகன்பாபு

மோகன்பாபு

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு அவர் தமிழில் நடித்துள்ள படம் இது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகிறது.

விமானத்தில்

விமானத்தில்

விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இந்த விமானத்துக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.47 லட்சமாம். 15 நாள் விமானத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் இடம்பெறும் வெய்யோன் சில்லி என்ற பாடலை விமானத்தில் சமீபத்தில் வெளியிட்டனர்.

கன்னட சினிமா

கன்னட சினிமா

இந்நிலையில், இந்தப் படம் மூலம் கன்னட சினிமாவுக்கு செல்கிறார் சூர்யா. ஜி.ஆர்.கோபிநாத் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப் படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட உள்ளனர். கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்படும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

இந்தியில் ரீமேக்

இந்தியில் ரீமேக்

இதை சூர்யாவுடன் இணைந்து தயாரிக்கும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ குனீத் மோங்கா, இதைத் தெரிவித்துள்ளார். 'இந்தியில் ரீமேக் செய்வது பற்றி பேசி வருவது உண்மைதான். இந்தப் படத்தில் நடித்தவர்களே நடிக்கிறார்களா, இல்லையா? என்பதை இப்போதே சொல்ல முடியாது' என்றார். இந்த நிறுவனம் இந்தியில் கேங்ஸ் ஆப் வாஸிப்பூர், பெடலர்ஸ், லஞ்ச்பாக்ஸ் உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X