40க்கும் மேற்பட்ட நாட்கள் கோவாவில் சூட்டிங்.. என்ன கோவை சரளா, யோகி பாபுல்லாம் படத்துல இருக்காங்களா!

கோவா : நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் சூர்யா 42.

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் துவங்கப்பட்டு சில தினங்கள் சூட்டிங்கும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 42. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். தன்னுடைய வழக்கமான கமர்ஷியல் பாணியிலிருந்து விலகி இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

வணங்கான் படம்

வணங்கான் படம்

முன்னதாக சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்தப் படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்த நிலையில், தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வந்தார் சூர்யா.

சூட்டிங் நிறுத்தப்பட்ட வணங்கான் படம்

சூட்டிங் நிறுத்தப்பட்ட வணங்கான் படம்


18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா இணைந்த இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து முதல்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் 35 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டு சிவா இயக்கத்தில் இணைந்துள்ளார் சூர்யா.

சூர்யா 42 படம்

சூர்யா 42 படம்

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு சில தினங்கள் சூட்டிங்கும் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாது கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு கோவா சென்றுள்ளது. கோவாவில் இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நேற்றுமுதல் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

மிரட்டலான மோஷன் போஸ்டர்

மிரட்டலான மோஷன் போஸ்டர்

முன்னதாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு பாலிவுட் நாயகி திஷா பட்டானி ஜோடியாகியுள்ளார். இன்றைய தினம் அவர் இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

40 நாட்கள் சூட்டிங்

40 நாட்கள் சூட்டிங்

இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் 40 நாட்களுக்கும் மேல் ஒரேகட்டமாக நடத்தப்படவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கோவை சரளா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், அவர்களும் நேற்று முதல் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X