சூர்யா 42 படத்தோட அடுத்தடுத்த அப்டேட்.. அடுத்த சூட்டிங் எங்கன்னு பார்க்கலாமா!

சென்னை : நடிகர் சூர்யா -சிவா காம்பினேஷனில் சூர்யா 42 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது

அடுத்தடுத்த சூட்டிங்குகளை படக்குழு திட்டமிட்டு வருகிறது. அடுத்ததாக வெளிநாடுகளில் சூட்டிங் நடத்தப்படுவதாக கூறப்பட்டது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா


நடிகர் சூர்யா தனது வணங்கான் படத்தின் சூட்டிங்கை தள்ளிவைத்துவிட்டு தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார். இந்தப்படம் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டது.

கோவாவில் நடந்த சூட்டிங்

கோவாவில் நடந்த சூட்டிங்

தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக கோவாவிற்கு சென்ற படக்குழு அங்கு பிரம்மாண்ட செட்டில் சூட்டிங்கை மேற்கொண்டது. இந்த படப்பிடிப்பில் அடுத்தடுத்த சிறப்பான காட்சிகள் மற்றும் சூர்யா -திஷா பட்டானி பங்கேற்ற பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து இந்த இரண்டாவது ஷெட்யூல் நிறைவு பெற்றது.

சென்னை திரும்பிய படக்குழு

சென்னை திரும்பிய படக்குழு


தீபாவளியையொட்டி இந்த ஷெட்யூல் முடிக்கப்பட்டு, படக்குழு சென்னை திரும்பியது. தொடர்ந்து பல்கேரியா உள்ளிட்ட இடங்களில் 3வது கட்ட சூட்டிங் நடைபெறும் என்றும் இந்த ஷெட்யூல் 5 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அடுத்தக்கட்ட சூட்டிங் விசாகப்பட்டினத்தில் வரும் நவம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினம் -கேரளாவில் சூட்டிங்

விசாகப்பட்டினம் -கேரளாவில் சூட்டிங்

இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங் கேரளாவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சூர்யாவின் சினிமா கேரியரில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல அதிகமான பிசினசை இந்தப் படம் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

150 நாட்கள் நடைபெறும் சூட்டிங்

150 நாட்கள் நடைபெறும் சூட்டிங்

தொடர்ந்து படத்தின் சூட்டிங் 150 நாட்கள் நடைபெறவுள்ளன. படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம். படத்தில் முதல் முறையாக பாலிவுட் நாயகி திஷா பட்டானி அறிமுகமாகியுள்ளார்.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

சூர்யாவின் அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரை மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தயுள்ளது. பாலாவுடன் அவர் இணைந்த வணங்கான் படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வாடிவாசல் படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X