கோவா சூட்டிங்கை முடித்த சூர்யா 42 டீம்.. அடுத்தது சூட்டிங் எங்க தெரியுமா.. வெளிநாட்டுலதான்!
சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 டீம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் சூட்டிங்கை துவங்கி சில தினங்களுக்கு முன்பு முடித்துள்ளது.
தீபாவளியையொட்டி சில தினங்கள் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
அடுத்தக்கட்ட சூட்டிங்கை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 3 வெளிநாடுகளில் இந்த சூட்டிங் நடைபெறவுள்ளதாம்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தனது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என மாறுபட்ட கதைக்களத்தில் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் சூர்யா 42 படம் உருவாகி வருகிறது.

சூர்யா 42 படத்தின் சூட்டிங்
இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு சில தினங்கள் சூட்டிங் நடத்தப்பட்டன. தொடர்ந்து படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டன. படத்தின் சூட்டிங்கில் திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

கோவாவில் நடந்து முடிந்த சூட்டிங்
இவர்கள் இருவரின் டூயட் சாங் சூட்டிங்கும் கோவாவில் நடத்தப்பட்டது. இதுகுறித்து சூர்யா உள்ளிட்டவர்கள் தனக்கு கால் செய்து பாராட்டியதாக படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் சமீபத்திய தனது பேட்டியில் பகிர்ந்துக் கொண்டார். முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியது.

நவம்பரில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இதனிடையே இந்தப்படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங், தீபாவளி நிறைவடைந்தவுடன் துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் படம் உருவாகிவரும் சூழலில் படத்தின் அதிகப்பட்ச சூட்டிங் வெளிநாடுகளில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாடுகளில் சூட்டிங்
நவம்பர் முதல் வாரத்தில் படக்குழு இந்தப் படத்தின் 3வது கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளதாம். ஆம், 3 நாடுகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, பிஜி போன்ற இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது இதில் 3 நாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கேரியா, செர்பியாவில் சூட்டிங்
குறிப்பாக ஐரோப்பாவின் பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளில் சூர்யா 42 படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. 3வது நாடு குறித்தும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு மேற்கொள்ளவுள்ளது.

ரசிகர்களுடன் போட்டோஷுட்
தற்போது சூர்யா பெங்களூருவில் கர்நாடக ரசிகர்களுடன் இணைந்து போட்டோஷுட் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதில் ஏராளமான சூர்யா ரசிகர்கள் பங்கேற்று அவரை வாழ்த்தி, சூர்யாவுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் தன்னுடைய கர்நாடக ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளார் சூர்யா.


Click it and Unblock the Notifications











