பொங்கலுக்கு வெளியாகும் சூர்யா 42 படத்தின் டைட்டில் -பர்ஸ்ட் லுக்.. 5 கேரக்டர்களில் சூர்யா கலக்கல்!

சென்னை : ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப படங்களை கொடுத்து அதன்மூலம் வெற்றியையும் பெற்று வருகிறார் நடிகர் சூர்யா.

அவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துவரும் நிலையில், தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

11ம் நூற்றாண்டின் வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் பிளாஷ்பேக்கில் 5 கேரக்டர்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறியுள்ளார் சூர்யா. அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனத்துடன் நடித்து வருகிறார்.

வணங்கான் படத்தில் சூர்யா

வணங்கான் படத்தில் சூர்யா

இதனிடையே முன்னதாக பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்திருந்தார் சூர்யா. இந்தப் படத்திற்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரியில் 35 நாட்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டு, தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்

வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது சூர்யா 42. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் 11ம் நூற்றாண்டின் பின்னணியிலும் தற்போதைய காலகட்டத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. தற்போது படத்தின் மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இலங்கையில் அடுத்தக்கட்ட சூட்டிங்

இலங்கையில் அடுத்தக்கட்ட சூட்டிங்

தொடர்ந்து சூர்யா 42 படக்குழுவினர் இலங்கையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 3டியில் உருவாகவுள்ள இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்திய அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.

சூர்யா -திஷா பட்டானி டூயட்

சூர்யா -திஷா பட்டானி டூயட்

படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின் திஷா பட்டானி, சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார். இவர்கள் இருவரின் டூயட் காட்சிகள் கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார். சிங்கம் படங்களை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் மாயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் டைட்டில்

பொங்கலுக்கு வெளியாகும் டைட்டில்

கடந்த 4 நாட்களாக படத்தின் சூட்டிங்கில் சூர்யா மற்றும் யோகிபாபு இணைந்த காட்சிகள் சென்னை ஈசிஆரில் எடுக்கப்பட்டன. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை பொங்கலையொட்டி படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X