ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சூர்யாவின் தூரிகா பாடல் அடிபொலி!
சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா ஆந்தாலஜியில் சூர்யா நடித்துள்ள படம் கிடார் கம்பி மேலே நின்று.
இந்த படத்தில் சூர்யா, பிரயாகா மார்ட்டின் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
நேற்றைய தினம் படத்தில் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாளில் 1 மில்லியன் வியூசை பாடல் கடந்துள்ளது.

ஆகஸ்ட் 6ல் ரிலீஸ்
நவரசா ஆந்தாலஜி இயக்குநர் மணிரத்னத்தின் முயற்சியில் உருவாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி நவரசா ஓடிடியில் வெளியாக உள்ளது.

கௌதம் மேனன் + சூர்யா
9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் 9 கதைகள் உருவாக்கப்பட்டு நவரசாவில் வெளியாகவுள்ளது. 9 ரசங்களை மையமாக கொண்டுள்ள இதில் காதலை தன்னுடைய களமாக்கிக் கொண்டுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். இதில் சூர்யா மற்றும் பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடித்துள்ளனர்.

லிரிக் வீடியோ பாடல்
இந்த படத்தின் முதல் பாடல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. 9 படங்களில் சூர்யா மற்றும் கௌதம் மேனனின் இந்த படத்தின் பாடல் மட்டுமே தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. லிரிக் வீடியோவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. மெலடி பாடலான தூரிகா பாடலை கார்த்திக் இசையமைத்து பாடியுள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த பாடலுக்கு வரிகளை கொடுத்துள்ளார் மதன் கார்க்கி. ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து எழுதியுள்ளார். நேற்றைய தினம் இந்த பாடல் வெளியிடப்பட்ட நிலையில் ஒரே நாளில் ஒரு மில்லியன் வியூக்களை இந்த பாடல் தற்போது கடந்துள்ளது. இதன்மூலம் இந்த படத்தின்மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications