வாடிவாசல் படம்... செப்டம்பர்ல சூட்டிங் ஆரம்பமாகுது... படக்குழு அறிவிச்சுருக்காங்க
சென்னை : வெற்றி மாறன் -சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் சூட்டிங் கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று வெற்றி
நடிகர் சூர்யா தனது தேர்ந்தெடுத்த கதைகளால் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த இவரது சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. மேலும் அடுத்ததாக நவரசா படத்தின் ரிலீசுக்காக சூர்யா காத்திருக்கிறார்.

சூட்டிங் நின்ற வாடிவாசல்
மேலும் வாடிவாசல் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்கள் கொரோனா தாக்கம் மற்றும் அதையடுத்த லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுன் இந்த படங்களின் சூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளன.

தயாரிப்புக்குழு அறிவிப்பு
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வாடிவாசல் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சூட்டிங்கை துவக்கி விரைவில் முடிக்கவும் வெற்றி மாறன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் சூட்டிங்
இதேபோல பாண்டிராஜ் படத்தின் சூட்டிங்கும் லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது சூரி -விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு படத்தை இயக்கிவரும் வெற்றி மாறன் அதன் சூட்டிங்கையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

தனுஷை இயக்கும் வெற்றிமாறன்
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இந்த போஸ்டரில் மிகவும் தீவிரமான முக பாவங்களுடன் காணப்படுகின்றனர். இந்த படங்களை அடுத்து நடிகர் தனுஷூடன் வெற்றிமாறன் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











