'ஒடிடி-யில் வெளியிடுவதா? நடிகர் சூர்யாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. கார்த்தி படத்துக்கும் சிக்கல்?
சென்னை: சூரரைப் போற்று படத்தை ஓடிடி-யில் வெளியிட இருப்பதை அடுத்து நடிகர் சூர்யாவுக்கு தியேட்டர் அதிபர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
Recommended Video
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது.
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து
தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

கொரோனா காரணமாக
விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை.

நடிகர் சூர்யா
இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று நடிகர் சூர்யா நேற்று அறிவித்தார். தமிழில் முன்னணி ஹீரோ ஒருவரின் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்ரமணியம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

கார்த்தி படத்துக்கும் சிக்கல்
இந்நிலையில் சூர்யாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. ஏற்கனவே ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி-தளத்தில் வெளியானபோது, சூர்யா குடும்பத்தினரின் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இப்போது, நடிகர் சூர்யா தனது படத்தையும் ஒடிடி-யில் வெளியிட்டு இருப்பதால், கார்த்தி படங்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

மறுபரீசீலனை
தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ' இது தவறான முடிவு. விரைவில் தியேட்டர்களை திறப்பதற்கான அனுமதியை அரசு வழங்க இருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். இது மற்றவர்களுக்கும் தவறான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தும். நடிகர் சூர்யா தனது முடிவை மறுபரீசீலனை செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார். இந்நிலையில் இதுபற்றி விரைவில் கூடி தியேட்டர் சங்க நிர்வாகிகள் ஆலோசிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











