விரைவில் சூர்யா 42 படத்தின் டைட்டில்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பு தரப்பு!

சென்னை : நடிகர் சூர்யா -சிவா காம்பினேஷனில் உருவாகி வருகிறது சூர்யா 42 படம். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரே மிரட்டலாக அமைந்த நிலையில், விரைவில் டைட்டில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து தன்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்புகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

மிரட்டிய ரோலக்ஸ் கேரக்டர்

மிரட்டிய ரோலக்ஸ் கேரக்டர்

இந்தப் படங்களில் குறிப்பாக விக்ரம் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ஷேட் இருந்த நிலையிலும், அவரை அந்தக் கேரக்டரில் முழுநீள படத்தில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தின் நீட்சியாக விரைவில் விக்ரம் 3 படம் உருவாக உள்ளது.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

சமூக அக்கறையுடன் கூடிய படங்களில் தொடர்ந்து நடித்துவரும் சூர்யா, ரோலக்ஸ் போன்ற கேரக்டரில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்ற கேள்வி விமர்சகர்களிடம் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் எழாமல் இல்லை. ஆனால் நடிப்பை நடிப்பாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் வணங்கான்

பாலா இயக்கத்தில் வணங்கான்

இந்தப் படத்தை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின்பு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திற்காக இணைந்திருந்தார் சூர்யா. படத்தின் சூட்டிங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அந்தப் படத்தின் சூட்டிங்கை நிறுத்தியுள்ளார் சூர்யா. ஆனால் பாடல் கம்போசிங் விறுவிறுப்பாக நடைபெற வருவதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சூர்யா 42 படம்

சூர்யா 42 படம்

இதனிடையே சிவா இயக்கத்தில் தன்னுடைய சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கப்பட்டு சில தினங்கள் நடைபெற்ற நிலையில் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்பது மோஷன் போஸ்டரை பார்த்தவுடன் ரசிகர்கள் கணித்த கணிப்பு. வரலாற்று பின்னணியில் இந்த மோஷன் போஸ்டர் காணப்பட்ட நிலையில், கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விரைவில் கோவாவில் சூட்டிங்

விரைவில் கோவாவில் சூட்டிங்

விரைவில் கோவாவில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், படத்தின் டைட்டிலையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சில தினங்களிலேயே அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்களை திணறடித்து வருகிறது சூர்யா 42 படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X