என்னாது சூர்யா மகன் ஹீரோவா.. இது உண்மையா ஜோதிகா மேடம்?

நடிகர் சூர்யாவின் மகன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியின் மகன் தேவ் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் தங்களது குழந்தைகள் மீது நட்சத்திர புகழ் படராமல் வளர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் சூர்யா ஜோதிகா தம்பதியினர்.

ஆனாலும் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தங்களது பிள்ளைகளை அவர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய படமொன்றில் தன் மகனை கதையின் நாயகனாக அறிமுகப் படுத்த சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்குகிறாராம்.

இது தான் கதை:

இது தான் கதை:

ஒரு சிறுவனுக்கும், நாய்க்குட்டிக்கும் இடையேயுள்ள பாசம் தான் படத்தின் கதைக்களமாம். குழந்தைகளுக்கான சினிமாவாக இதனை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படத்தில் சூர்யாவின் மகன் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்பியிருக்கிறார்.

கதை ஓகே:

கதை ஓகே:

அதனைத் தொடர்ந்து சூர்யா -ஜோதிகாவைச் சந்தித்து இது தொடர்பாக அவர் பேசியுள்ளார். அவர் கூறிய கதை அவர்களுக்குப் பிடித்துவிடவே, தங்களது மகனை நாயகனாக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு நடிகர்கள்:

வாரிசு நடிகர்கள்:

தமிழ் சினிமாவில் தற்போது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்த குறும்படம் சமீபத்தில் வெளியானது. விரைவில் அவர் வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

ரசிகர்கள் மகிழ்ச்சி:

இந்தச் சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு வாரிசு நடிகரான சூர்யாவின் மகனும் களமிறக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X