»   »  சூர்யா 36... இயக்குநர் செல்வராகவன்!

சூர்யா 36... இயக்குநர் செல்வராகவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் 36வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் வெற்றிப்பட இயக்குநராக அறியப்பட்டவர். ஆனால் தொடர்ந்து சில படங்கள், குறிப்பாக இரண்டாம் உலகம் சொதப்பியதால் மிகுந்த நெருக்கடிக்குள்ளானார்.

Surya teams up with Selvaraghavan

அவர் இயக்குவதாக இருந்த மூன்று படங்கள் அடுத்தடுத்து நின்று போயின. இப்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் அவர் சூர்யாவுடன் கை கோர்த்துள்ளார். கோலிவுட்டையே சற்று ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது இந்த புதிய கூட்டணி.

செல்வராகவன் இந்தப் படத்துக்கான முழு ஸ்க்ரிப்டையும் பக்காவாக எழுதி வைத்திருந்தாராம். அதைப் படித்த சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இந்தப் படத்தில் நடிக்க முன்னுரிமை தந்தாராம். தானா சேர்ந்த கூட்டம் படத்தை முடித்த கையோடு, செல்வராகவன் படத்தைத் தொடங்கப் போகிறார்களாம்.

இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை எஸ் ஆர் பிரபு தனது ட்ரீம் வாரியர் நிறுவனம் மூலம் தயாரிக்கிறது. சூர்யாவுக்கு இது 36 வது படம்.

English summary
Dream Warrior Pictures’ SR Prabhu has surprised everybody in the industry by roping in Selvaraghavan to direct Suriya .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil