Director Bala : பாலாவை மிரட்டி பணத்தை வசூலித்த சூர்யா... அடிமேல் அடிவாங்கும் பாலா!
சென்னை : நடிகர் சூர்யா வணங்கான் படத்திற்காக செலவு செய்த பணத்தை மிரட்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் பாலா, நீண்ட நாட்களுக்கு பிறகு வணங்கான் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

வணங்கான் படத்தில், சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகவும், 2-டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி கடந்தாண்டு படப்பிடிப்பு தொடங்கியது.
சூர்யா விலகினார் : வணங்கான் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து, படத்தை கைவிட விரும்பாத பாலா, அருண்விஜய்யை வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார்.
கீர்த்தி ஷெட்டி : இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் இருந்து கீர்த்தி ஷெட்டி விலகி படத்தை மீண்டும் சிக்கலாக்கினார். இதையடுத்து, வணங்கான் படத்தின் தயாரிப்புப் பணிகள் நீண்டுகொண்டே சென்றதால் படத்தில் இருந்து விலகியதாக கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருந்தார். அவருக்கு பதில் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்க உள்ளார்.
டார்ச்சர் செய்யும் பாலா : அருண்விஜய்யை பாலா படாதபாடுப்படுத்தி, டார்ச்சர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றுவிட வேண்டும் என்ற வெறியோடு அருண்விஜய் இருப்பதால், பாலா என்ன சொன்னாலும், அதற்கு மறுபேச்சு பேசாமல் அருண்விஜய் வணங்கா படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
நீதிமன்றம் செல்வேன் : இந்நிலையில் வணங்கான் படத்திற்காக சூர்யா இதுவரை 7 கோடி அளவிற்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா படத்தில் இருந்து விலகியதுமே, பாலா அந்த பணத்தை கொடுத்துவிடுவார் என்று நினைத்து சூர்யா காத்திருந்த போதும், பணம் திரும்பி வராததால், சூர்யா பாலாவிடம் பணத்தை கேட்டிருக்கிறார். கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

நன்றி இல்லையா : இதனால் வேறுவழியில்லாமல் சூர்யா செலவு செய்த 7 கோடி ரூபாயை சூர்யாவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாலாவால் தான் தனது சினிமா வாழ்க்கையே தொடங்கியது என்ற நன்றி கூட பார்க்காமல், சூர்யா இப்படி நடந்து கொண்டாரா என்று பல சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











