இன்று நேற்று நாளை இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா... இப்பவே வேலை துவங்கிடுச்சாம்!

சென்னை : நடிகர் சூர்யா, அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வருகிறார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளன. தொடர்ந்து பாலா, வெற்றிமாறன் என அடுத்தடுத்த படங்களை திட்டமிட்டு நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா, தமிழின் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் உள்ளார். இவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஓடிடியில் ரிலீசான நிலையில் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக ஜெய்பீம் படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று பல விருதுகளை கைப்பற்றியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் வசூல் சாதனை புரிந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படமும் சிறப்பாக அமைந்தது.

பாலா இயக்கத்தில் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா

இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் துவங்கப்பட்டு தொடர்ச்சியாக 35 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டு முதல் ஷெட்யூலை முடித்துள்ளது படக்குழு. கன்னியாகுமரியில் இந்த சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து 2வது கட்ட சூட்டிங் எங்கு நடக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாடிவாசல் டெஸ்ட் சூட்

வாடிவாசல் டெஸ்ட் சூட்

முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா இணையவுள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் நடைபெற்ற நிலையில், பாலா படத்திற்கு பிறகு இந்த படத்தில் சூர்யா இணையவுள்ளார். அடுத்தப்படத்தின் திட்டமும் தற்போது சூர்யாவின் கையில் உள்ளது. இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாருடன் அடுத்ததாக சூர்யா இணைகிறார்.

ரவிக்குமாருடன் கூட்டணி

ரவிக்குமாருடன் கூட்டணி

இந்தப் படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், படம் 2024ல் தான் ரிலீசாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அயலான் படத்தின் வேலைகளை முடித்துள்ள ரவிக்குமார், அடுத்ததாக சூர்யா படத்தின் வேலைகளை துவக்கியுள்ளார்.

சயின்ஸ் பிக்ஷன் படம்

சயின்ஸ் பிக்ஷன் படம்

இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக உள்ளதாம். படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்கு ஒரு ஆண்டு ஆகும் என்று முன்னதாக ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 50 ஆண்டுகள் கழித்து உலகத்தில் ஏற்படும் வாழ்க்கை மாற்றத்தை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் சிறப்பான படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X