தேசிய விருது ‘நாயகன்‘ சூர்யா..மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு..குவியும் வாழ்த்து!

சென்னை : நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். சூர்யாவின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த விருது மறக்கவே முடியாத பிறந்த நாள் பரிசாக மாறியுள்ளது.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இது நேரலையில் ஒளிபரப்பானது.

2020-ல் ஏற்பட்ட கொரோனா தொற்றால், சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த ஆண்டு கிட்டத்தட்ட 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால், பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து அனைவரையும் மிரட்டி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தில், நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பல விருதுகள்

பல விருதுகள்

சர்வதேச அ்ளவில் பாராட்டை பெற்ற இந்த படம் பல விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதையும் சுதா கொங்கராவே இயக்க, சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யா நடித்த ரோலில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார்.

5 தேசிய விருதுகள்

5 தேசிய விருதுகள்

சூரரைப் போற்று படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்ற நிலையில், தற்போது சிறந்த நடிகருக்கான விருது சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருது சூரரைப்போற்று படத்தில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த பிஜிஎம்முக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த ஃபீச்சர் படமாக சூரரைப் போற்று படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மறக்கமுடியாத பிறந்த நாள் பரிசு

மறக்கமுடியாத பிறந்த நாள் பரிசு

சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்திருக்கிறது. சூரரைப் போற்று படத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 விருதுகள் இப்படத்திற்கு கிடைத்திருப்பதில் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூர்யாவின் கடின உழைப்பு வீண் போகவில்லை என்றும் சூர்யாவின் அற்பணிப்புக்கு கிடைத்த பரிசுக்கு கிடைத்த மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X