»   »  சூர்யா-ஜோ வரவேற்பு ரத்து: மிரட்டல் காரணம்?

சூர்யா-ஜோ வரவேற்பு ரத்து: மிரட்டல் காரணம்?

Subscribe to Oneindia Tamil

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. பாதுகாப்புகாரணங்களுக்காக தனியாக நடக்க விருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யாவுக்கும், நடிகை ஜோதிகாவுக்கும் செப்டம்பர் 11ம் தேதி சென்னையில்திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் சிவக்குமார் குடும்பம் படு தீவிரமாகஉள்ளது.நடிகை ஜோதிகாவுக்கான கூர்த்த பட்டுச் சேலைகள் சமீபததில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில்எடுக்கப்பட்டது.

சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது தெரியவந்துள்ளது.நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று திருமணம் நடைபெறவுள்ளதால், இக்கல்யாணத்திற்குசில மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

மேலும், சூர்யாவும், ஜோதிகாவும் மிகவும் பிரபலமான கலைஞர்கள் என்பதாலும், மிகப் பெரிய வி.ஐபிக்கள்திருமணத்திற்கு வரக்கூடும் என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுளளது. தற்போது சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும்.

மேலும், திருமணத்தன்று, ஒரு அழைப்பிதழுக்கு 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கண்டிப்பாகஅன்பளிப்புகளை தவிர்க்கும் படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பூச்செண்டுகளுக்கும், கிப்ட் பார்சல்களுக்கும்அனுமதி கிடையாது.

திருமணம் முடிந்ததும் 12ம் தேதி சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சிக்குத்திட்டமிட்டிருந்தனர். தற்போது போலீஸாரின் அறிவுரைப்படி அதை ரத்து செய்து விட்டனர். அதற்குப் பதிலாக11ம் தேதி காலை 8.30மணி முதல் 12.30 மணி வரை திருமணம் நடைபெறும் அடையார் பார்க் ஹோட்டலில்வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். திருமணம் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil