»   »  சூர்யா கல்யாணத்திற்கு மிரட்டல் இல்லை: கமிஷனர்

சூர்யா கல்யாணத்திற்கு மிரட்டல் இல்லை: கமிஷனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை என்று சென்னைமாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், போலீஸாரின்அறிவுரைப்படி மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுவதாக இருந்த வரவேற்புநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர்லத்திகா சரண், சூர்யா,ஜோதிகா திருமணம் தொடர்பாக எந்தவித மிரட்டலும்வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடையார் பார்க் ஹோட்டலுக்குமாற்றப்பட்டதிலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை.

திருமணத்தில் முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் போது அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். எனவேசூர்யா திருமணத்தின் போதும் பாதுகாப்பு அளிக்கப்படும்.

திருமணத்திற்குக் கொண்டு வரப்படும் பார்சல்கள், பரிசுப் பொருட்கள்உள்ளிட்டவற்றை உரிய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

கல்யாணத்திற்கு 3 புடவை: இதற்கிடையே, ஜோதிகா தனது கல்யாணத்திற்கு 3பட்டுப் புடவைகளை எடுத்துள்ளாராம்.

கடந்த ஒரு வருடமாகவே, சென்னையைச் சேர்ந்த ஆர்.எம்.கே.வி. ஜவுளிநிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக உள்ளார் ஜோதிகா. அந்த நிறுவனத்தின் புதியரக பட்டுப் புடவைகளுக்கான ஜோதிகா நடித்த விளம்பரங்கள் சூப்பர் ஹிட்.

அதிலும், எந்தக் கலர் புடவை என்ற வாசகத்திடன் கூடிய விளம்பரம் தமிழகபெண்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம். இப்போது ஜோதிகாவின் முகூர்த்தப்புடவையையும் ஆர்.எம்.கே.வி. நிறுவனம் தான் வழங்கியுள்ளது.ஜோதிகாவுக்காகவே படு விசேஷமாக இந்தப் பட்டுப் புடவையைதயாரித்துள்ளனராம்.

இளம் சிவப்பு நிறத்திலான சேலையை ஜோதிகா முகூர்த்தத்திற்குக் கட்டிக் கொள்ளதேர்வு செய்துள்ளாராம். அத்தோடு மேலும் 3 பட்டுப் புடவைகளையும் அவர் தேர்வுசெய்துள்ளார்.

தி.நகரில் உள்ள ஆர்.எம்.கே.வி. நிறுவனத்திற்கு சமீபத்தில் ஊரெல்லாம் அடங்கியபின்னர் ஜோதிகா, சிவக்குமார் குடும்பத்தினருடன் வந்து இந்த சேலைகளை தேர்வுசெய்து எடுத்துச் சென்றாராம்.

சூர்யா-ஜோ வரவேற்பு ரத்து: மிரட்டல் காரணம்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil