சூர்யா40 இன்று பூஜை.. பிரபல காமெடி நடிகரும் இணைகிறார்!

சென்னை: நடிகர் சூர்யா சூரரை போற்று படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

Recommended Video

Suriya 40 kick started today with Poojai | Vadivelu Come Back

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, D.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த படத்தில் நடிகர் சூரியாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதற்கு முன் கேங் லீடர், டாக்டர் (இன்னும் வெளிவரவில்லை) படங்களில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து டான், சூர்யா40 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் பிரியங்கா.

5ம் முறை கூட்டணி

5ம் முறை கூட்டணி

இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வைகை புயல் வடிவேலு சூர்யாவுடன் 5ம் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

ரசிகரின் திருமணம்

ரசிகரின் திருமணம்

சமீபத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரில் சென்று கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ரசிகர்கள், பிரபலங்கள் நலம் பெற வாழ்த்தியிருந்தனர்.

படப்பிடிப்பு ஆரம்பம்

படப்பிடிப்பு ஆரம்பம்

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா அடுத்து நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகர் சூர்யா இன்னும் சில நாட்களில் படக்குழுவுடன் இணைவார் என தெரிகிறது.

More from Filmibeat

Read more about: surya pooja பூஜை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X