Kanguva: கொரியன், ஜப்பானிய, சீன மொழிகளிலும் வெளியாகும் கங்குவா.. பிரபல தயாரிப்பாளர் அப்டேட்

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் கங்குவா படத்தின் சூட்டிங் கொடைக்கானல், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

சூர்யா பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

கங்குவா படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Suryas Kanguva movie to be dubbed and release in Korean, Japanese and Chinese languages

கொரியன், ஜப்பானிய, சீன மொழிகளில் ரிலீசாகும் கங்குவா படம்: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று அர்த்தம் என படத்தின் இயக்குநர் சிவா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவை வெளியான நிலையில், அவை அனைத்திலும் நெருப்பாகவே சூர்யா காட்சியளித்திருந்தார். சிவா போன்ற கமர்ஷியல் இயக்குநரிடம் இருந்து இதுபோன்ற ஒரு படைப்பை எதிர்பார்க்கவில்லை என்றே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதான டிஜிட்டல் உள்ளிட்ட வியாபாரங்களிலும் அதிகமான வசூலை செய்துள்ளது. சூர்யாவின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படைப்பாகவும் கங்குவா அமைந்துள்ளது. இந்தப் படம் இந்திய அளவில் பான் இந்தியா படமாக மட்டுமில்லாமல் 10 மொழிகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து படத்தை கொரியன், ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

படம் பான் உலகப் படம் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியில் மட்டுமே படம் 400 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கோணத்தில் பார்த்தால் படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் தனஞ்செயன் கூறியுள்ளார்.

கங்குவா படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களையும் எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் ரெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்குவா படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் பட்ஜெட் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளார். படத்தின் சிஜி காட்சிகள் மட்டுமே ஏறக்குறைய 2 மணிநேரங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தில் இன்னும் 40 நாட்கள் சூட்டிங் மட்டுமே பாக்கியுள்ளதாகவும் அவை ஆக்ஷன் காட்சிகள் என்றும் தனஞ்செயன் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சூட்டிங்கில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் பங்கேற்கவுள்ளார். இந்த ஷெட்யூல் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கி நவம்பர் மாதத்தில் நிறைவடையும் என்றும் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் 3டி வேலைகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X