Suryavamsam: அதே நட்சத்திர ஜன்னல்... அதே இட்லி உப்புமா... சூர்யவம்சம் 2ம் பாகம் அப்டேட்!

சென்னை: சரத்குமார் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சூர்யவம்சம்.

1997ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கியிருந்தார்.

சரத்குமாருடன் தேவயானி, ப்ரியா ரமணன், ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படங்களில் ஒன்றான சூர்யவம்சம் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Suryavamsam: Sarathkumar is ready to act in the second part of Suryavamsam

சூர்யவம்சம் 2ம் பாகம் அப்டேட்
கோலிவுட்டின் சுப்ரீம் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் சரத்குமார், 90களில் டாப் ஹீரோவாக கலக்கி வந்தார். போலீஸ் கெட்டப், வில்லேஜ் சப்ஜெக்ட் போன்ற படங்களுக்கென்ற அளவெடுத்து தைத்ததைப் போல பக்காவாக செட்டாகிவிடுவார் சரத்குமார். சில வருடங்களாக அவுட் ஆஃப் பீல்டில் இருந்த சரத்குமார், பொன்னியின் செல்வன், வாரிசு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வரும் சரத்குமார், வெப் சீரிஸ் பக்கமும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்குமார், சூர்யவம்சம் படத்தின் 2ம் பாகம் குறித்து பேசியுள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படங்களில் மிக முக்கியமானது சூர்யவம்சம்.

1997ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் லோ பட்ஜெட் படமாக உருவான சூர்யவம்சம் வெள்ளிவிழா கொண்டாடியது. சரத்குமார், ராதிகா, தேவயானி, ப்ரியா ரமணன், மணிவண்ணன், ஆனந்த்ராஜ், ஆர் சுந்தராஜன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். பேமிலி செண்டிமெண்டல் படமாக வெளியான சூர்யவம்சம் இப்போது தொலைக்காட்சிகளில் டிஆர்பி கிங்காக காணப்படுகிறது.

இப்படத்தில் வரும் இட்லி உப்புமா சீன் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் 'நட்சத்திர ஜன்னலில்', 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ', 'சலக்கு சலக்கு சரிகை சேலை' போன்ற பாடல்கள் செம்ம ஹிட்டடித்தன. குறிப்பாக ஒரே பாடலில் சரத்குமார் கோடீஸ்வரனாகவும், தேவயானி கலெக்டராகவும் முடியும் என்பதை 'நட்சத்திர ஜன்னலில்' பாடலில் காட்டியிருந்தார் விக்ரம்.

 Suryavamsam: Sarathkumar is ready to act in the second part of Suryavamsam

இப்படி இன்னும் பலவிதங்களில் கொண்டாடப்பட்ட சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சரத்குமார் கூறியுள்ளார். ஆனால், இரண்டாம் பாகத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் குறித்து எந்த அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை. மேலும், சூர்யவம்சம் இரண்டாம் பாகம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது தான் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டால் 90ஸ் கிட்ஸ் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X