உதயநிதிக்கு வில்லியான ஆபிஸ் சூசன்
நண்பேன்டா படத்தில் ஹெவியான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் டிவி நடிகை சூசன். ஒரு கல் ஒரு கண்ணாடி', ‘இது கதிர்வேலன் காதல்' படங்களைத் தொடர்ந்து தற்போது ‘நண்பேன்டா' எனும் படத்தை தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக நடிக்கிறார் நயன்தாரா. காமெடிக்கு சந்தானமும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஜெகதீஷ் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக இருக்கின்றன.

காமெடி, த்ரில்லர்
‘நண்பேன்டா' படத்தை முழுக்க முழுக்க காமெடிப் படமாக இல்லாமல் காமெடி த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்களாம்.

வில்லியான சூசன்
இப்படத்தில் நடிகை ஷெர்லின் நயன்தாராவிற்கு வில்லியாக நடிப்பதாக கூறப்பட்டது இந்த நிலையில் நடிகை சூசன் உதயநிதிக்கு வில்லியாக நடிக்கிறார் என்ற தகவல் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்திருக்கிறது.

டிவி சீரியல் வில்லி
‘தென்றல்', ‘ஆபிஸ்' போன்ற டிவி சீரியல்கள் மூலம் புகழ்பெற்ற நடிகை சூசன் ‘மைனா', ‘ரா ரா', ‘தேசிங்கு ராஜா' உள்ளிட்ட படங்களில் ஏற்கெனவே நடித்திருக்கிறார்.

அது ரகசியம்
தற்போது ‘நண்பேன்டா' படத்தில் சோலோ வில்லியாக நடித்து வருகிறாம் சூசன். இதனை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.

நல்ல வில்லி
ஹீரோவுக்கு எதிரான கதாபாத்திரம் என்றால் ரசிகர்கள் மனதில் நன்றாக பதியும். படையப்பா ரம்யா கிருஷ்ணன், திமிரு ஷ்ரேயா மாதிரி சிறந்த வில்லியாக பெயரெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சூசன்.


Click it and Unblock the Notifications











