’படத்தில் கருத்து இருக்கும்.. ஆனால் கசப்பாக இருக்காது’ ஜீனியஸ் படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன்!

ஜீனியஸ் படத்தில் முக்கியமான கருத்து இருக்கும் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்

சென்னை: ஜீனியஸ் திரைப்படத்தில் முக்கியமான மெஸ்சேஜ் இருக்கும் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜீனியஸ். இப்படம் நாளை வெளியாக உள்ளது.

Suseenthiran about Genius!

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜீனியஸ் திரைப்படம் குறித்து பல விஷயங்களை இயக்குனர் சுசீந்திரன் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தில் ரோஷன் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு அப்பாவாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். அவருக்கு இப்படத்தில் மூன்று தோற்றங்கள் உள்ளன. ஜீனியஸ் படத்தின் கதாபாத்திரத்திற்கு ரோஷன் மிகச்சரியான ஆள். கதாநாயகியாக பிரியா லால் நடித்துள்ளார்.

என்னுடைய எல்லா படத்திலும் சமுகக் கருத்துகள் இருப்பது போல், இப்படத்திலும் உள்ளது. கல்வியால் ஏற்படும் அழுத்தத்தை மாணவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருக்கும். காலை எழுந்தவுடன் படிப்பு என பாரதியார் சொன்னார். ஆனால் இன்று நிறைய குழந்தைகள் மாலை நேரத்தில்தான் படிக்க துவங்குகிறார்கள்.

அவர்கள் வளர்ந்து வேலைக்குச் சென்ற பிறகு வேறுவிதமான அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். எடுத்துகாட்டாக சொல்லவேண்டுமென்றால், ஐடியில் துறை இளைஞர்கள், வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு, வார இறுதியில் தூங்குவார்கள். அவர்களால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் போகும். அதனால் ஒருவகை மன அழுத்தம் உண்டாகும்.

டார்கெட் முடிக்க வேண்டும், பிரசண்டேஷன் கொடுக்கவேண்டும் போன்ற விஷயங்களால் மன அழுத்தத்திற்க்கு ஆளாகுபவர்களைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களை பேசும் படமாக ஜீனியஸ் இருக்கும்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தன்னிலை இழக்கும் ஒருவன், இந்த சமூகத்தை எப்படி அணுகுகிறான் என்பதுதான் கதை. இப்படத்தில் தேவையான கருத்து இருக்கும் ஆனால் கசப்பாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். ஜீனியஸ் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார், ஆர்.பி.கௌரவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X