நான் மகான் அல்ல பார்ட் 2.. இயக்குநரின் அதிரடி முவு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் நான் மகான் அல்ல படத்தின் பார்ட் 2 எடுக்க முடிவு செய்திப்பதாக கூறியிருக்கிறார் பிகே.
Recommended Video
லாக்டவுன் அமலில் உள்ள போதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் சினிமாவில் பல பணிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெறும் சில நிகழ்வுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அதன்படி இன்றைய டாப் 5 பீட்ஸில் இயக்குநர் சுசீந்திரன் நான் மகான் அல்ல பார்ட் 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் அட்லியின் உதவி இயக்குநர் அசோக் குமாரின் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.
ஊரடங்குக்கு பிறகு ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படம், மற்றும திரிஷ்யம் 2 படத்தை இயக்கும் ஜித்து ஜோசப் உள்ளிட்ட தகவல்களையும் கூறியிருக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ், கவுதம் வாசுதேவன் மேனனின் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு செல்பி என பெயரிடப்பட்டுள்ள தகவல்களையும் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications